எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு  எடுப்பதை தொடர்ச்சியாக தடுத்து வரும் விதமாக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகின்றது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் உண்மையிலேயே ஒரு சமூக நீதிப் பார்வையில் அனைவருக்குமான நலத்திட்டங்களை உறுதிப்பட செலுத்த முடியும், உறுதிப்பட அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் கணக்காக இருக்கின்றது. எனவே இந்த முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான முடிவாக எதிர்க்கட்சிகளை ஊடகங்கள் சரியாக கையாளவில்லை. இந்த இந்தியா கூட்டணி கட்சியினர் ஊடகங்களில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது  தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து,  அதற்கு ஒரு துணைக் குழுவை அமைத்திருக்கின்றார்கள். அந்த துணைக் குழுவில் கிட்டத்தட்ட 12 பேர் இருக்கிறார்கள். அந்த துணைக் குழுவில் இருக்கின்ற நபர்கள் மீண்டும் கூடி எந்தெந்த ஊடக நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்கின்ற ஒரு முடிவை எடுக்க எடுக்க இருக்கின்றார்கள். இது ஒரு மிக முக்கியமான முடிவாக இருக்கின்றது.

ஏனென்றால் இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து சமூக ஊடகங்களை கையாளும் விதத்தில் சற்று மாற்றத்தை நம்மால் பார்க்க முடிகின்றது. சமூக ஊடகங்களின் மூலமாக பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதன் மூலமாக மக்களிடம் சென்று சேரலாம் என்று அவர்கள் முடிவு செய்கின்றார்கள். mainstream media என்பது மரபு சார்ந்து ஊடகங்களை கையாளும் விதத்திலும் அவர்கள் சில மாற்றங்களை கையாளுவார்கள் என்று தெரிகிறது.

துணைக் குழு என்ன முடிவெடுக்கின்றதோ,  அந்த முடிவின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிய வருகிறது. சில ஊடகங்கள் , சில ஊடக நிகழ்ச்சிகளை  முதல் கட்டமாக புறக்கணிப்பு என்ற முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுதான் முதற்கட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த அடுத்த கட்டமாக அதை நகர்த்துவது என்று முடிவும் இருக்கிறது.