மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து போயினர். திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. இதனையடுத்து  முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்த உடனே மக்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பணம் சில நிமிடங்களிலேயே மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அபராதமாக சில வங்கிகள் அந்த பணத்தை எடுத்துக்கொண்டன. ஜன் தன் வங்கிக்கணக்கை தவிர மற்ற அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.