இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தற்போது நெவார்க் நகரம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி நெவார்க் நகரம் கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு நித்யானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளி என்ற உண்மை தெரிய வந்துள்ளதால் நெவார்க் நகரம் கைலாசவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதன் பிறகு மற்ற நகரங்களும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவை ஏமாற்றி நித்தியானந்தா 30-க்கும் மேற்பட்ட நகரங்களுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டது அந்நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.