
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிகை மேக்னா ராஜ் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மேக்னா கர்ப்பமாக இருக்கும்போது சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதன் பின்னர் மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறக்க தனது கணவரை குழந்தையாக பிறந்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அது மட்டுமின்றி தான் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தன்னுடைய கணவர் தான் தனக்கு உறுதுணையாக இருக்கிறார் என்று கூறி உள்ளார். இந்நிலையில் நடிகை மேகனா 2வது திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைதளத்தில் பல தகவல்கள் வெளிவந்தது.
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீயே வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தன் கணவர் சிரஞ்சீவியை தவிர தன்னுடைய வாழ்வில் வேறு யாருக்கும் இடம் இல்லை என்பதை உறுதி செய்து இரண்டாவது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.