நீட்தேர்வு கட்டாயம் சட்டத்திற்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற தி.மு.க அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வாறு தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றமானது அனுமதி வழங்கி உள்ளது.

அதனை தொடர்ந்து நீட்தேர்வு கட்டாயம் எனும் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சொல்லி புதிய வழக்கு பிப்,.18-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆகவே நீட்தேர்வுக்கு எதிரான தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் புதிய மனுவானது விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.