தமிழகத்தைப் பொறுத்தவரையில் காவல்துறையில் காலியிடங்களாக இருக்கக்கூடிய 621 எஸ்.ஐ பதவிகளுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி இருந்தது. இந்த தேர்வுகளில் 621 இடங்களில் 20% இடங்கள் துறை ரீதியாக காவலர்களுக்கே ஒதுக்கப்படும். காவல்துறையில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய காவலர்கள் அந்த தேர்வை எழுதும்போது அவர்களுக்கு 20% ஒதுக்கீட்டின் கீழ் அந்த இடங்கள் நிரப்பப்படும்.

இந்த ஒதுக்கீட்டில் இடங்களுக்கான தேர்வில்தான் முறைகேடு நடந்திருப்பதாக அதிக அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பார்க்க வேண்டும் என்றால் ? அடுத்தடுத்த எண்களில் இருக்கக்கூடிய தேர்வர்கள் அதிக அளவில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.தேர்வு நடைபெற்ற மையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே முறைகேடுகள் நடைபெற்றதா ? இல்லையா ? என்பது போன்ற விவரங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.