சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அளித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் புதுமைப்பெண் திட்டம், மகளிர் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், வரும், ஜுன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில், ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் குடும்பத் தலைவிகளுக்கு எந்த அடிப்படையில் மாதம் 1000 வழங்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அனைவருக்கும் 1000 கொடுத்தால் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் 2000 கோடி செலவு ஏற்படும். அதனை கட்டுப்படுத்த கணவரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலேயே உதவித் தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.