
அதிரடி படமாக உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் ஒரு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Deva’s rage begins in 50 days!😎 #CoolieIn50Days 🔥#Coolie in Hindi is now #CoolieThePowerhouse #Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges… pic.twitter.com/XvrXdSjJfg
— Sun Pictures (@sunpictures) June 26, 2025
மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாக உள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியில்”மஜ்தூர்” என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த தலைப்பு சாதாரணமாக இருப்பதாகவும் சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு ஏற்ப தலைப்பு இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது அதனை ஏற்றுக் கொண்ட படக்குழு கூலி படத்தின் இந்தி தலைப்பை “கூலி தி பவர் ஹவுஸ்” என பெயரை மாற்றி உள்ளது. ஏனெனில் கூலி என்ற பெயர் ஏற்கனவே அமிதாப்பச்சன் படத்தின் தலைப்பாகும்.