திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே தருவை என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த ஊரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே சின்ன சண்டை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கு மண்டையில் சின்ன லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் பட்ட மாணவன் தன் பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளான். இதைக் கேட்டு கோபமடைந்த பெற்றோர் மற்றொரு மாணவனின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்த அந்த மாணவனை அடித்தும் உள்ளனர். பெற்றோர் அடித்ததில் அந்த மாணவனின் கழுத்து மற்றும் கைப்பகுதியில் உள் காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து பதறிப் போய் வந்த காயம் பட்ட மாணவனின் தாய் மாணவனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மேலும் தன் மகனுக்கு நடந்ததை கூறி முன்னீர்பள்ளம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.