
பாலிவுட் நடிகராக இருப்பவர் விவேக் ஓபராய். இவர் பிரியங்கா ஆல்வாவை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா நிர்வாணா மற்றும் விவான் வீர் என்று 2 குழந்தைகள் உள்ளன. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசினார். அப்போது இவர் கூறியதாவது, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை விருப்பினேன். அவர் தான் என் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நாங்கள் உறவில் இருந்தோம். அதன் பின் ஒன்றாக நாங்கள் இருவரும் சேர்ந்து கல்லூரிக்குச் சென்றோம். அவரை திருமணம் செய்து கொள்வது, குழந்தைகளை பெறுவது என்று கற்பனை செய்து இருந்தேன்.
திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ்க்கையை வாழலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தேன். திடீரென்று என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, என்ன காரணம் என்று தெரியாமல் நான் அவரது உறவினரை தொடர்பு கொண்டேன். அப்போதுதான் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். உடனே நான் மருத்துவமனைக்கு சென்றேன், அவர் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவின் இறுதிக்கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நான் உடைந்து நொறுங்கி விட்டேன். அப்போது அவருக்கு 18 வயது. அவர் இல்லாத உலகத்தை என்னால் ஏற்க முடியவில்லை, நீண்ட காலம் அவரது நினைவில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை என்று உருக்கமாக பேசினார்.