
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற பட்டத்துடன் தமிழ், இந்தி திரை உலகில் மிகப்பெரிய கதாநாயகியாக உயர்ந்தவர்.
இவர் நடித்த “பொன்னியின் செல்வன்” இவரது நடிப்பை உலகிற்கு மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது. இந்நிலையில் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “எனது மனைவி ஐஸ்வர்யா எனது மகள் ஆராத்யாவை மிகவும் சிறப்பாக வளர்த்துள்ளார். எனது மகள் எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லை, செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதும் இல்லை.
அவரை இந்த அளவுக்கு சிறப்பாக வளர்த்ததற்கு மிக முக்கிய காரணம் ஐஸ்வர்யா தான். என் மகள் ஆராத்யா தான் என் குடும்பப் பெருமை அவரை சிறப்பாக வளர்த்த பெருமை என் மனைவியை மட்டுமே சேரும்” என பெருமிதமாக கூறினார்.