
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொன்னுக்கு வீங்கி நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் 61 பேர், 2022-23ல் 129 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023-24ல் 8 மடங்காக அதிகரித்து 1091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலத்தில் பரவும் இந்த நோய்க்கு குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றது. இவற்றில் அதீத காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்ற அறிகுறியுடன் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் பரவி வருகிறது. இந்நோயால் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அம்மை நோய் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, பொன்னுக்கு வீங்கியின் முக்கிய அறிகுறியாக கண்ணம் பகுதியில் கீழ்கழுத்தின் ஒரு புறத்திலோ அல்லது 2 புறத்திலோ வீக்கம் ஏற்படும். இந்த தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக காய்ச்சல் குறைக்க பாரசிட்டமால் மாத்திரை வழங்கலாம். வலி அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரையில் வழி மாத்திரையும் வழங்க வேண்டும். வீக்கம் ஏற்பட்ட இடத்தில் குளிர் அல்லது சுடு ஒத்தடம் வழங்கலாம். கஞ்சி, மோர், பழயச்சாறு, கூழ் போன்றவை சாப்பிடலாம். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நோய் ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாகிடும். அதே நேரம் சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்று தெரிவித்துள்ளனர்.