வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின் மராகேஷிசு தென்மேற்கில் 71 கிலோமீட்டர்… 44 மைல் தொலைவில் இருக்கக்கூடிய  ஹை -அட்லஸ் மலையில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புயல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்த்தை  பொறுத்தவரை கிட்டத்தட்ட 6.8 ரிக்டர்  அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மிகப்பெரிய அசம்பாவிதம் அங்கு ஏற்பட்டிருக்கிறது. கட்டிடங்கள் இடிந்து விளைந்து இருக்கின்றது. கிட்டதட்ட 1037-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்க்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளை  செய்து வருகிறார்கள்.

இந்த நிலநடுக்கத்தை பொறுத்தவரை  பிரதமர் நரேந்திர மோடியும் இதற்கு தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். மொராக்கோவோடு என்றும் நாம் துணை நிற்போம் என்றும், உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.