கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து லிங்கை திறந்து பார்த்த போது தினமும் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி முதல் கட்டமாக சுரேஷ் ரெட்டி 18,000 ரூபாய் முதலீடு செய்த பிறகு அவருக்கு லாபமாக 24,350 ரூபாய் கிடைத்தது. இதனால் சுரேஷ் மொத்தமாக 9 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு அந்த தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்த போது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.