அக்டோபர் 15 முதல், இந்தியாவின் வங்கிகள் வழங்கும் சேமிப்புக் கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் விதிமுறைகள் மாற்றப்படவுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள், வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மினிமம்  பேலன்ஸ் தொகையை மேலும் எளிமையாக்குகிறது. வங்கிகளின் சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருப்பில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா போன்ற சில வங்கிகள், ரூ.250, ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகிய தொகைகளை பராமரிக்க வேண்டும் எனக் கூறுகின்றன. இவை, வங்கியில் கணக்குகள் திறக்கும்போது தரப்படும் தனிப்பட்ட தேவைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

அதேசமயம், எச்டிஎஃப்சி வங்கியில் பூஜ்ஜிய இருப்பு கணக்குகள் திறக்க மினிமம் ரூ.2500 மொத்தம் தேவைப்படுகிறது. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற கிளைகளுக்கேற்ப மாறுபடும். அந்த வகையில் ரூ.1000, ரூ.2000, ரூ.5000, ரூ.10000 வீதம் குறைந்த பட்ச இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வேறு என்ன மாற்றங்கள் என்பது இந்த மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும்.