ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் 5,000 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுபற்றிய ஆய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “230 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜிஸ்தான் உள்ளிட்ட 6 மாகாணங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டுள்ளனர். இது பெண்கள் கல்வி கற்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.