
தெலுங்கு திரைப்படமான “கண்ணப்பா” திரைப்படம் இந்துமத சிவ பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கற்பனை திரைப்படம் ஆகும். அந்தப் படத்தை மோகன் பாபு தயாரித்து வருகிறார்.
மேலும் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மோகன் பாபு, ஆர். சரத்குமார், அரபித், ரங்கா, கௌசல்மந்தா, ராகுல், மாதா, தேவராஜ் ரிஷி துணை வேடங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக நடிகர் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹாட் டிரைவ் திருடப்பட்டதாக பட குழு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் கண்ணப்பா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு மஞ்சு கூறியதாவது, அந்த ஹார்ட் டிரைவ் திருட்டுக்கு முக்கிய காரணம் தனது சகோதரர் மஞ்சு மனோஜ் என கூறினார்.
இச்செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹார்ட் டிரைவை திருடுவதற்கு ரகு மற்றும் சித்ரா ஆகியோர் மஞ்சு மனோஜிற்கு உதவியுள்ளனர் என கூறினார்.
மேலும் படத்தின் காட்சிகள் இணையங்களில் வெளியானால் அதனை மக்கள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். தற்பொழுது பைரவம் திரைப்படம் மஞ்சு மனோஜ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.