ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். 13-வது சுற்று நிலவரப்படி பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவின் செயல்பாடுகளை பார்த்துதான் மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை. ஒரு ஆளுங்கட்சியை எதிர்க்க எத்தனை பலத்தோடு இருக்க வேண்டும் என்பதை இந்த இடைத்தேர்தல் உணர்த்தி உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கான தேர்தலாக இருக்கும் என்று அண்ணாமலை கூறினார்.