தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை பெற அஞ்சலக வங்கிக்கணக்கு கட்டாயம் என சொல்லி மோசடியில் ஒரு நபர் ஈடுபட்டு உள்ளார். அதோடு இந்த அஞ்சலக வங்கிக் கணக்கை தாமே தொடங்கி கொடுப்பதாகவும், இதற்காக ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும் எனவும் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகவலறிந்த அதிகாரிகள் அங்கு சென்று விசாரணைநடத்தினர். இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் மக்கள் தங்களின் பணத்தை இழக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.