
சமீபத்தில் அளித்த பேட்டியில் அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டிலிருந்து புகையிலை மற்றும் நிக்கோட்டின் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு தடை விதித்து வருகிறது. அதாவது 2023 மே மாதம் இந்தத் தடை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம், உணவுப் பொருட்கள் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர்கள் 391 குழுக்களாக பிரிந்து, தமிழ்நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டன. இதன் மூலம் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்த நபர்களை கைது செய்தனர், மேலும் 19822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 கோடியே ஆகும்.
மேலும் மாணவர்களுக்கிடையே புகையிலை மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றும் அதற்காக, ஒன்றிய அரசின் கவுன்சில் பார் லெதர் எக்ஸ்போர்ட் இந்தியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை இணைந்து ‘போதைப் பொருள் இல்லாத சமூகம்’ என்ற விழிப்புணர்வு மாறத்தான் நடத்தப்பட்டது. இதில் ஏறத்தாழ 10,000 பேர் பங்கேற்கும் வகையில் அமைந்துள்ளது.
இதை அடுத்து அவர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளார் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அவர், விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தனது கடமைகளை திறம்பட செய்துள்ளார். இதே போலவே துணை முதலமைச்சர் பொறுப்பையும் சிறப்பாக செய்து முடிப்பார் என நம்பிக்கை உள்ளது.