நாடு முழுவதும் இருக்கும் ஏராளமான மக்கள் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டரை தான் பயன்படுத்துகின்றனர். இதற்கென மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது. எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிலிண்டர் பயன்பாடு என்பது அரிய விஷயமாக இருக்கிறது. இதன் காரணமாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புது திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

அதாவது, கடினமான மற்றும் தொலைதூர பகுதிகளில் (மலைப்பாங்கான பகுதிகள், காடுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள், குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்கள், தொந்தரவான பகுதிகள், தீவுகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிகளில் LPG விநியோகம் செய்வதற்காக அரசு விநியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகைகளை அதிகரிக்கவும், விண்ணப்ப செயல்முறையை எளிதாகவும் திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் சிலிண்டர் பயன்பாடு எளிய முறையில் அணுககூடியதாக இருக்கும்.