நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  முகமது அலி ஜின்னா எந்திரிச்சு நாடு கேட்கும் போதே….  என் பாட்டன்,  தாத்தனுங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு கேட்டிருந்தா… முடிஞ்சது கதை.

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு தமிழ்நாடு தனியா இருந்தா என்ன ? ஒண்ணா இருந்தா என்ன ? எளவு போடான்னு போயிட்டு போய் இருப்பான். இங்க  எங்க ஆளு கேக்கும்போது….  அங்க ஈழத்தில் கேட்டிருப்பான்….  நாடு ரெண்டு ரெண்டா போய்…  தமிழனுக்கு ரெண்டு தாயகம் வந்து…. இந்நேரம் சிறந்து விளங்கி இருக்கலாம்.

ஒருத்தர் காந்தி பற்றாளர்,  நேரு பற்றாளர். ஒருத்தர் சுபாஷ் சந்திர போஸ் பற்றாளர், கதை முடிஞ்சது. இன்னைக்கு பேரன் நாங்க நெஞ்சில் அடிச்சுக்கிட்டு… எல்லா உரிமை இழந்துட்டு, தாய் மொழியில் படிக்க முடியாது… படிச்சா வேலை கிடையாது… எந்த உரிமையும் கிடையாது… வரி வரி வரி வரி வரின்னு சொறிஞ்சு எடுக்கிறான் என தெரிவித்தார்.