LIC ஒரு புது க்ளோஸ்-எண்ட்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எல்ஐசி-ன் தன் விருத்தி (திட்டம் 869) ஜூன் 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலும் விற்பனைக்கு கிடைக்கும். LIC Dhan Vridhhi என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனி நபர், சேமிப்பு, ஒற்றை பிரீமியம் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் கலவையை அளிக்கிறது.

பாலிசி காலத்தின்போது துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் மரணமடைந்தால், இத்திட்டம் அவரது குடும்பத்திற்கு ஆதரவை வழங்கும் என LIC கூறுகிறது. மேலும் முதிர்வு தேதியில் உத்தரவாதமுள்ள மொத்த தொகையையும் வழங்கும். இதனிடையே  LIC இணையதளம் ஒரு கால்குலேட்டரை வழங்குகிறது. இதன் வாயிலாக நீங்கள் எந்தவொரு உறுதியளிக்கப்பட்ட தொகைக்கும் செலுத்தவேண்டிய பிரீமியத்தை கணக்கிடலாம்.

உதாரணமாக LIC இணையதளத்திலுள்ள பாலிசி கால்குலேட்டரின் படி, 36 வயதுடைய பாலிசிதாரரால் செலுத்தப்படும் மொத்த பிரீமியமும், 10 வருட காலத்துக்கான காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சமும் தோராயமாக இருக்கும் (ரூ.8,16,720 (வரி உள்பட). இவை விருப்பம் 1-க்கானது ஆகும். அதனை தொடர்ந்து இறப்பிற்கு உறுதியளிக்கப்பட்ட தொகை இந்த வழக்கில் தோராயமாக ரூ.11.6 லட்சமாக இருக்கும்.