சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து
வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி கட்டடத்தின் பெயர் பலகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மளமளவென எரிந்த தீ, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் தெரிந்ததால் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. இதனால் எல்.ஐ.சி ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிகிறது.