லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மணிப்பால் டைகர்ஸ் அணி..

சூரத்தில் உள்ள லால்பாய் காண்டிராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2023 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், ஹர்பஜன்சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி ரெய்னா தலைமையிலான அர்பன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில், முதலில் விளையாடிய அர்பன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக ரிக்கி கிளார்க் 52 பந்துகளில் 80 ரன்களும், குர்கீரத் சிங் 36 பந்துகளில் 64 ரன்களும் எடுத்தனர். மேலும் டுவைன் ஸ்மித் 21 மற்றும் பீட்டர் ட்ரெகோ 17 ரன்களும் எடுத்தனர். இதனால் அர்பன் ரைசர்ஸ் 187 ரன்களை குவித்தது.

பின்னர் ஆடிய மணிபால் டைகர்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பாவின் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஆனால் திடீரென விக்கெட்டுகள் சரிந்ததையடுத்து, மிடில் ஆர்டரில் அசேல குணரத்ன நின்று அரைசதம் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அர்பன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் :

முன்னதாக, ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 0 ரன்னில் வெளியேறியபோது ஹைதராபாத் மோசமான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் டுவைன் ஸ்மித் கிளார்க்குடன் இணைந்து அணியை பலப்படுத்தினார். ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தபோது, ​​கிளார்க் குர்கீரத் சிங்குடன் இணைந்து 122 ரன்கள் எடுத்தார். கிளார்க் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களும், குர்கீரத் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களும் எடுத்தனர். டிரெகோ 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

மணிப்பால் டைகர்ஸ் அணி பேட்டிங் :

பின்னர் 188 ரன்கள் இலக்கை துரத்திய மணிப்பால் டைகர்ஸ் வலுவான தொடக்கத்தை பெற்றது. ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 40 ரன்களும், சாட்விக் வால்டன் 17 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர். மிடில் அசேல குணரத்ன 29 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களையும், திசர பெரேரா 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 25 ரன்களையும் எடுத்து தனது அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றனர். இதன் பிறகு, கொலின் டி கிராண்ட்ஹோம் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார். மணிப்பால் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது..