சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் இருக்கிறது. தரமான கதைக்களத்தில் சிறந்து நடிகர்கள் நடிப்பில் மக்களிடம் மாபெரும் வெற்றிப்பெற்ற ஒரு சீரியல் எனில், அது கோலங்கள் தொடர் என்று கூறலாம். கடந்த 2003 ஆம் வருடம் துவங்கப்பட்ட இந்த சீரியல் 2009-ல் முடிவுக்கு வந்தது. இதில் நடிகை தேவயானி நாயகியாக நடித்து அசத்தினார். முதல் முதலில் தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா தான் நடிப்பதாக இருந்தது.
எனினும் அவர் வேறொரு வேலைகளில் சிக்கியதால் இதில் நடிக்க முடியாமல் போனது. இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கி வரும் திருச்செல்வம் தான் கோலங்கள் தொடரை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கோலங்கள் 2-வது சீசன் வரப்போவதாக தகவல் வெளியிட்டு உள்ளார். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.