ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க ஆட்டமாக, மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதின. இதில், இரண்டாம் இன்னிங்சில் ரன் சேஸ் செய்யப் போகும் நேரத்தில், வீராட் கோலியை நேரில் காண ஆசைப்பட்ட ரசிகர் ஒருவர், பாதுகாப்பை மீறி களத்துக்குள் புகுந்து கோலியின் காலில் விழுந்து வணங்கி அவரை கட்டி அணைத்தார்.

உடனே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனால் கோலி, பாதுகாப்புப் படையினரிடம் அவரை அடிக்காமல் மெதுவாக அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.