ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மழை காரணமாக 16 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் விழுந்த பந்தை எடுத்து மறைத்து அதை கொண்டு சென்றார். இதை அங்கிருந்த காவல்துறையினர் கவனித்ததோடு அந்த ரசிகரை பிடித்து அவரிடம் இருந்த பந்தை வலுக்கட்டாயமாக வாங்கினர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.