தெலுங்கானா மாநிலத்தின் நிசமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பொது, தென்னிந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வரும் ஒரு விஷயம் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,  ஆலயங்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என குற்றம் சாட்டினார்.

அத்துடன் ஆலயங்களின் சொத்துக்கள், வருமானங்கள் ஆகியவற்றையும் முறைகேடாக பயன்படுத்துவதாக கடுமையாக சாடினார். அதே சமயத்திலே சிறுபான்மையினர் உடைய வழிபாடு தளங்களை மாநில அரசு தொடவில்லை எனவும்,  ஏன் இப்படி இந்து ஆலயங்கள் மீது மட்டும் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜாதிவாரி ஜனத்தொகை கணக்கெடுப்பு குறித்து  கட்சியின் கருத்தை குறிப்பிட்டு வருகின்றது. எவ்வளவு மக்கள் தொகையோ, அதற்கெற்ற வகையில் உரிமை என காங்கிரஸ் பேசி வருகிறது.  அப்படி பேசி வரும் காங்கிரஸ் ஆலயங்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துமா ? குறிப்பாக தமிழ்நாட்டிலேயே உள்ள காங்கிரசின் கூட்டணி கட்சி ஆலயங்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளுமா ? என பேசினார்.