சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற சீதா ராமன் திரைப்படத்தில் வருவது போலவே ஜப்பானில் உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் வெளியான சீதாராமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் தனது ராஜ பதவியை துறந்து, சொத்துக்களை நிராகரித்து தனது காதலனுடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தாலும் பரவாயில்லை என பிரின்சஸ் நூர்ஜகான் கதாநாயகனை தேடிச் செல்வதை போல, தனது காதலுக்காக இத்தனை தியாகங்கள் செய்யக்கூடிய  பிரின்சஸ் நூர்ஜகான் போன்ற கதாப்பாத்திரங்கள் நிஜ உலகில் இருப்பது கடினம் தான்.

இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என பரவலான கருத்துக்கள் இது குறித்து அப்போது பேசப்படவே, தற்போது  வாழ்க்கையின் அனுபவங்களே சினிமா என்று உணர்த்தும் வகையில், இப்பட கதை போன்ற உண்மையான சம்பவம் ஒன்று ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பானில் இளவரசி மாக்கோ கொமோரா தனது சிறுவயது காதலனான கெய் கொமோராவை மணப்பதற்காக தனது ராஜ பதவியை துறந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை தொடங்க துணிந்தார்.

ஜப்பானில் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாமானியர்களை மணக்கும் போது தங்களது ராஜ பதவியை துறந்து முழுவதுமாக விட்டு வெளியேற வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, காதலுக்காக ராஜ பதவியையும், சொத்துக்களையும் துறந்து சாதாரண வாழ்க்கையை தொடங்க அக்டோபர் 26 2021 இல் தனது காதலனை  மணந்தார்.

அதன் பின் டோக்கியோவில் சிறிது காலம் வசித்தவர்கள், பின் நியூயார்க் சென்று சந்தோஷமான வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றனர். அவரது காதல் கணவர் நியூயார்க்கில் சிறப்பான வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.