இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே PIPOnet என்ற இணையதள செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய செயலியை NuRe Bharath Network , RailTel அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியின் மூலம் ஒரே நேரத்தில் பலவிதமான பயன்பாடுகளை பெற முடியும். அதன்படி பயணத்தின் போது ஹோட்டல் முன்பதிவு, பொழுதுபோக்கு அம்சங்கள், நெட்பிளிக்ஸ், ஊபர், ஓலா போன்ற சேவைகள், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு, பிளாட்பார்ம் டிக்கெட், தங்குவதற்கு முன்பதிவு மற்றும் உணவு போன்ற பல வசதிகள் இருக்கிறது. இந்த செயலி அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த செயலி மூலம் அடுத்த 5 வருடங்களில் ரூ. 1000 கோடி வருவாய் ஈட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.