
தொலைக்காட்சி நடிகையும், இயக்குனருமான நீனா குப்தா சமீபத்தில் அளித்த யூடியூப் நேர்காணல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில், கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி யூடியூப் மற்றும் டிவி தொகுப்பாளினியான லில்லி சிங்குடன் நடைபெற்ற நேர்காணலில் பாலியல், வயது பாகுபாடு, பாலிவுட் பெண்களின் நிலை குறித்து பேசிய நீனா குப்தா உடலுறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது , “இந்தியாவில் 95% பெண்கள் உடலுறவு என்பது மகிழ்வுக்காக அல்ல, ஆண்களை திருப்திபடுத்தவும், அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக மட்டுமே என நம்புகிறார்கள்.
அவர்களுக்கு இது ஒரு மகிழ்வான அனுபவம் என்பது புரிவதில்லை. இது இந்திய பெண்களிடையே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் தான்”என உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார்.
View this post on Instagram
மேலும் இதுகுறித்து வெளிப்படையாக பேசினால் சமூகத்தில் இது ஒரு இயல்பான விஷயமாக பார்க்கப்படும் எனவும் பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.