தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய். இவர் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் கால்ஷீட் கொள்கையை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, விஜய் சார் கால்ஷீட்டை சரியாக கொடுப்பார். அவரது கொள்கை 6 மாதங்கள் ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள்.

இதனால் படம் 6 மாதங்களில் முடிந்து விடும். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இருக்காது. நடிகர் விஜயின் இந்த ரூல்ஸை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். தெலுங்கு சினிமாவில் இது சீர்குழைந்து இருக்கிறது என்று தெரிவித்தார்.

[நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.