
நாயகன் படத்தை அடுத்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம், கமல் இணைந்துள்ள படம் தான் தக் லைப். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக அப்படக் குழுவினர் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலத்திற்கு சென்று படத்தின் புரோமோஷனுக்காக வேலை பார்த்து வருகிறது. இன்னிலையில் கேரளாவில் தக் லைப் படத்தின் ப்ரோமோஷன் கமலஹாசன் கூறியதாவது எல்லோருக்கும் பக்கத்து மாநிலத்தில் பேசுற மொழியை முதலில் கத்துக்கோங்க ஹிந்தியை அப்புறம் பார்த்துக்கலாம். எங்க மொழி அழிஞ்சு போகாம பார்க்க வேண்டியது தான் எங்கள் கடமை நாம் அனைவருமே திராவிடர்கள் மறந்துவிடாதீர்கள் என்று தெரிவித்தார்.