ஹாசாவில் இருக்கும் ஹமாஸின் சுரங்கப்பாதை கட்டமைப்பை தற்போது குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ஹமாஸின்  செயல்பாட்டு மையமாக இருக்கும் இந்த சுரங்கப்பாதை கட்டமைப்பை அழிப்பதன் மூலம் ஹமாஸினுடைய ஒட்டுமொத்தமான செயல்பாட்டையும் முடக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

நேற்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினுடைய முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், ஹமாஸ்  நிதி விவகாரங்கள்,  ஆயுதக்கடங்குகளில் தாக்குதல் நடத்துவது  என  ஹமாஸ்அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் வரை இந்த போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில்,  ஹமாசுக்கு  முக்கிய பலமாக விளங்கும் சுரங்கப்பாதை கட்டமைப்பை நோக்கி தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் ஆட்சி பிடித்ததில் இருந்து பல ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த சுரங்க பாதை  இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை திட்டமிடுவதற்கும்,  காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வந்தனர். இருந்த அந்த பாதைகளை தாக்கி அளிப்பதன் மூலம் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்து விட முடியும் என இஸ்ரேல் கருதுகிறது. தற்போது  30-க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் சுரங்கப்பாதை கட்டமைப்பை  அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.