இஸ்ரேல் ராணுவத்தைப் பொறுத்தவரை பாலஸ்தீன மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஹமாஸ் அமைப்பினரை வேரோடும்,  வேரடி மண்ணோடும் முழுமையாக அழிக்கும் வரை எங்களுடைய போரை நிறுத்தப்படுவதில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக இவ்வளவு நாட்களாக விமான தாக்குதல் நடத்தி வந்த நிலையில் நேற்று காலையில் இருந்து பீரங்கிகள்,  நவீன ஆயுதங்கள் மூலம் தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டார்கள்.

எனவே தரை வழியாக  காசா பகுதிக்குள் ஊடுருவும் இஸ்ரேல் ராணுவத்தினரை தடுத்து நிறுத்துவதற்காக ஹமாஸ் அமைப்பினர் பலரும் பாதைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீன மக்களும்,  குழந்தைகளும், பெண்களும் சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்படுவதாக தெரிவிக்கிறார்கள்.

இவர்களை குறி வைத்து தாக்கப்படுவதாக இஸ்ரேலிய ராணுவத்தினர் தரை வழியாக காசா நகரத்திற்குள் நுழைகிறார்கள். இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தான் நாங்கள் தடுத்து நிறுத்தி வருகிறோம் என கூறுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் ராணுவம்,  இதுவரை 120க்கும் மேற்பட்ட யூத மக்களை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

அது மட்டும் இன்றி பாலஸ்தீன மக்களை கூட பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது என கூறியுள்ளார்கள். இந்த கருத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனமும்,  எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தரை வழியாக இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதை ஹமாஸ் அமைப்பினர் தடுத்து வருகிறார்கள்.