காசா- இஸ்ரேல் இடையான போர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கியது. அந்த போரில் முதலில் இஸ்ரேலியர்கள் 1139 பேர் ஹமாஸ் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் 251 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக காசாவிற்கு கடத்திச் சென்றது. அதனை அடுத்து இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 52,000க்கும் மேற்பட்டோர் காசாவில்  உயிரிழந்துள்ளனர்.

அதன் பின் ஹமாஸ் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேலிய வாழ் அமெரிக்க இடன் அலெக்சாண்டர் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்தது.

அதன் பின் போரை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வடக்கு காசாவில் இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. அதில் 22 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக காசா மருத்துவமனை கூறியுள்ளது.