
சமீப காலமாகவே பல ஊடகங்கள் மற்றும் முன்னணி சினிமா விமர்சகர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் என அடையாளப்படுத்தி வருகின்றனர். அதிலும் டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு ஆடியோ லான்சிலும் பட தயாரிப்பாளர் தில் ராஜு, சரத்குமார் உள்ளிட்டோர் விஜயை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு பேசினர். அதைத்தொடர்ந்து பிரபல சினிமா விமர்சனர் பிஸ்னி விஜய்யை சூப்பர் ஸ்டார் எனவும் ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் என பேசிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை பற்ற வைத்தது.
அதைத்தொடர்ந்து பிஸ்னியின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் எனக் கூறியதற்கு கண்டனங்களை பதிவு செய்ததோடு அந்த கருத்து திரும்ப பெறுவதற்கும் வலியுறுத்தினர். இதை அடுத்து மாற்றுக் கருத்து கூறியதற்காக பத்திரிக்கையாளர் ஒருவரை அலுவலகம் சென்று ரஜினி ரசிகர்கள் மிரட்டியது நாகரீகமற்ற செயல் என்றும் ரஜினிகாந்தே அதை விரும்ப மாட்டார் என்றும் நடிகர் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் தலைவருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்பது விவாத பொருளாக மாறி கோலிவுட்டில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.