
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கியதில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. குறிப்பாக மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக என கூறி 5 ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்கிச் சென்ற ஒரு நபர் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபோன் 16 சீரிஸ் மீதான மக்களின் கிரேஸை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதன் புதிய அம்சங்கள் மற்றும் பிராண்ட் மதிப்பு காரணமாக மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.