உலக கோப்பையின் 5வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

2023 ஐசிசி 13வது ஒரு நாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி கடந்த 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 5வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 2 மணிக்கு மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

அதேசமயம் இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. எனவே அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.. இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவின் விளையாடும் XI :

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல்  (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.