ரவி அஸ்வினின் மனைவியும் மகளும் சேப்பாக்கத்தில் இருந்து அஷ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்குஇடையேயான போட்டி சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

அதேசமயம் இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. எனவே அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் பும்ராவின்3 வது ஓவரில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக இன்னிங்சை தொடங்கினர். களத்தில் டேவிட் வார்னர் இருந்ததால் கேப்டன் ரோகித் சர்மா 8வது ஓவரை வீச அழைத்தார். ஏனென்றால் டேவிட் வார்னர் அஸ்வினுக்கு எதிராக கடந்த காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அதை நாம் கடந்த ஆஸ்திரேலியா – இந்தியா ஒருநாள் போட்டியில் கூட பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் அஸ்வின் சீக்கிரமாக தனது முதல் ஓவரை வீசினார். அப்போது ஸ்டேடியத்தில் அஸ்வினின் மனைவி பிரித்தி நாராயணன் மற்றும் மகள் அவரது பந்துவீச்சை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அஸ்வின் மகள் கையை நீட்டி தனது அம்மாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் 6 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதற்கிடையே டேவிட் வார்னர் குல்திப் யாதவ் சூழலில் 41 ரன்களில் வெளியேறியுள்ளார். தற்போது ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இருவரும்  ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 21 ஓவரில் 88/2 என ஆடி வருகிறது..

உலகக்கோப்பில் அஸ்வின் கடைசி நேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விளையாடும் XI :

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல்  (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.