பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்கினார். இந்தப் படத்தில் கமலஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா,டெல்லி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயின் நிறுவனம் தயாரித்தது சமீபத்தில்  கடந்த ஜூலை மாதம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து இந்தியன் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை நேரடியாக நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, இந்தியன் 2 படத்திற்கு பெரும் அளவு வரவேற்பு கிடைக்காதது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் 2 வில் செய்த தவறுகளை கருத்தில் கொண்டு இந்தியன்3 திரைப்படத்தை மிகச் சரியாக செய்வேன். மூன்றாவது பாகம் நிச்சயமாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என கூறினார்.