இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கார் விருதினை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதினை வென்றது. அதன் பிறகு சிறந்த பாடல்களுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதினை வென்றுள்ளது.

இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் பட குழுவுக்கு தற்போது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இந்த மதிப்பு மிக்க அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த ஆஸ்கார் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.