தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர். குறிப்பாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்தது. இதனிடையே ஆளுநர் உரை நிகழ்த்திய போது  தமிழ்நாடு, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆளுநர் உரையில் வாசிக்காமல் கடந்து சென்றார்.

இது எதிர்க்கட்சிகளால் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆளுநர் உரை முடிந்த பிறகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் இதையே குறிப்பிட்டார். அரசு வழங்கிய உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில்,  சட்டசபையில் அமர்ந்திருந்த ஆளுநர் தேசிய கீதம் முடிவதற்கு முன்னதாக பாதியிலேயே வெளியேறினார்.

இதனை தொடர்ந்து திமுகவினர் கெட் அவுட் ரவி என்ற ஹேஷ்டாக்குகளில் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. #GetOutRavi என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.