உலக அளவில் இணையதள சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இணையதளம் முடக்கம் தொடர்பாக எஸ்எஃப்எல்சி என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலக அளவில் இந்தியா இணையதளம் முடக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் மட்டும் 418 முறை இணையதள சேவைகள் முடங்கியுள்ளது. அதன் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் 96 முறையும், மகாராஷ்டிராவில் 12 முறையும், உத்திர பிரதேசத்தில் 30 முறையும், தெலுங்கானாவில் 3 முறையும் முடக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு உலக அளவில் கடந்த வருடம் மற்றும் அதிகபட்சமாக இந்தியாவில் 84 முறை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உக்ரைனில் 22 முறையும், ஈரானில் 18 முறையும், மியான்மரில் 7 முறையும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களாக இணையதள சேவை முடக்கத்தில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் 106 முறையும், 2019-ஆம் ஆண்டு 121 முறையும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2021 முதல் 2022-ம் ஆண்டு வரை உலக அளவில் இணையதள சேவை நிறுத்தங்களில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.