ஐநா சபையின் மக்கள் நிதியம் அமைப்பு 2023-ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது.

இதற்கு முன்பு வரை சீனா உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கிறது. மேலும் 3-ம் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.