புதுச்சேரியில் 56-வது கம்பன் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவினை நேற்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை கேட்டு மனதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மனது மற்றும் உடலுக்கு தொடர்பு உண்டு. மனதில் மகிழ்ச்சி இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ராமாயணம் மற்றும் மகாபாரத காவியங்களை படித்தால் தற்கொலை எண்ணமே வராது.

அதாவது ராமாயண காப்பியத்தை படித்தால் வாழ்வில் தற்கொலை செய்யும் எண்ணம் வராது. வாழ்வின் துன்பங்களை கடந்து செல்லும் பக்குவத்தை ராமாயண காப்பியம் சொல்லும். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை படித்தால் அல்லது கேட்டால் அவர்கள் மன உறுதி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.