
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் சினிமாவில் மட்டுமின்றி கார் ரேஸிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு வருகிறார். தற்போது பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் இவர் பங்கேற்று வருகிறார். பெல்ஜியம்மில் கடந்த வாரம் கிளவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ப்ரோ ஏஎம் பிரிவில் அஜித்குமாரின் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்தது.
ஏற்கனவே துபாயில் நடந்த ரேசில் அஜித்தின் கார் ரேஸ் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து கார் ரேசில் அஜித் குமார் மற்றும் அவரது அணி வெற்றி பெற்று வரும் நிலையில், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எப்1 போன்ற கார் ரேஸ் தொடர்பான புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அஜித்குமார் கூறியிருக்கிறார்.
[தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்கும் அஜித்குமாரிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்து அவர் கூறியதாவது, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எஃப் 1 போன்ற படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று கூறினார்.