
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின் நம்பர்களின் சிறப்பை மட்டும் அல்ல அசாதாரமான நிலைத்தன்மை, உடற்தகுதி மற்றும் நீண்ட கெரியரையும் பிரதிபலிக்கிறது என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.
Unorthodox, unconventional and effective 🙌
A cricketer beyond numbers and statistics 👏
MS Dhoni is inducted in the ICC Hall of Fame 🥇
More ➡️ https://t.co/oV8mFaBfze pic.twitter.com/AGRzL0aP79
— ICC (@ICC) June 9, 2025
இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாபிரிக்காவின் ஷாஹிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் உள்ளிட்ட 7 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். என் டி டிவி தளம் கூறுவதுபடி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் என்பது தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கும் இடம்பெறுவது ஒரு கவுரவம்.
ஆல் டைம் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரும் நினைவு கூறப்படுவது சிறப்பான உணர்வு. இதை நான் என்றென்றும் மனதில் கொள்வேன் என்று தோணி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை வெல்ல வைத்த ஒரே இந்திய கேப்டன் எம் எஸ் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.