இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா தனது லீக் போட்டிகளை கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நடத்துகின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகின்றது. இதற்கான அட்டவணை இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது.